SAVE THE LONDON BBC TAMIL BROADCAST


Guest

/ #1

2014-09-27 13:51

நண்பர்களே
லண்டனில் இருந்து முழங்கும் BBC தமிழோசை! தெரியாதவர்கள் யாருமே இருக்கமுடியாது.
சின்னவயசா இருக்கும்போது இரவு 9:45க்கு தமிழோசை துவங்கப் போகிறது ரேடியோவைப் போடு என்பார் அப்பா...... அதில அப்பிடி என்னதான்இருக்கு. முதல்ல புரியல. என்ன வேலை இருந்தாலும் உடனே ரேடியோவைப் போட்டுவிடவேண்டும். அழகான நாதஸ்வர இசையோடு ஆரம்பிக்கும் அந்த BBC தமிழோசையை தினமும் கேட்டுப் பழகி பிறகு அதனைக் கேட்காமல் தூங்க முடிவதில்லை..... 1987 இல் போரினால் பாதிக்கப்பட்டு வீட்டைவிட்டு இடம்பெயர்ந்து ஊரூராகப் போய் வாழ்ந்தபோதிலும் எப்பிடியாவது BBC தமிழோசையைக் கேட்கத் தவறியதில்லை.... ஏனெனில் அப்பொழுது எங்களுக்கு இருந்த ஒரேயொரு செய்தி ஊடகம் BBC தமிழோசை மட்டும்தான். கோவில்களிலும், பாடசாலைகளிலும் தஞ்சமடைந்து இருந்தபோது அங்கிருந்த நூற்றுக்கணக்கான அகதிகள் எல்லோரும் ஒரு வானொலிப் பெட்டியைச் சுற்றிவர இருந்து செய்தி கேட்போம்......அப்படிப்பட்ட ஒரு மகத்தான சேவை கடந்த 74வருஷங்களாக லண்டனிலிருந்து தான் நிகழ்ந்தது.....
அந்த சேவையை தற்பொழுது இந்திய தலைநகர் டெல்லிக்கு மாற்றும் முயசிகள் நடைபெற்று வருகிறது.....
தொடர்ந்தும் BBC தமிழோசை லண்டனில் இருந்து முழங்கவேண்டும்..... அதற்கு உங்கள் ஆதரவு வேண்டும்....